கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியில் அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அக்கரைப்பற்று அணி மட்டக்களப்பு.திருகோணமலை மாவட்ட அணிகளை வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டன.
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அணியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பொறுப்பாளர் ஏ.எஸ்.பாஸீத் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபுர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரா்களை கௌரவிக்கவுள்ளார்.