அமைதியான சூழலை நாட்டில் முழுமையாக உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பிரிவு திட்டமிட்டு செயல்படுவதாகவும், பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டேகொட தெரிவித்தார்.
அதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பெரும்பாலானோர் இதுவரை பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்தார்.
பாதுகாப்புப் படைவினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.