கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவின் உத்தரவின் பேரில், மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளில் கற்பித்து வந்த முஸ்லிம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்துச் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் இந்த இடமாற்றங்களை இரத்துச் செய்துள்ளது.
ஆளுநர் ஹிஸ்புல்லா, தமிழ் பாடசாலைகளில் சேவையாற்றி வரும் முஸ்லிம் ஆசிரியர்களை முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்து வருவதாகவும் காத்தான்குடிக்கு தனியான கல்வி வலயத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி உடனடியாக இடமாற்றங்களை இரத்துச் செய்துள்ளார்.
இந்த நிலைமையில், 30 முஸ்லிம் பாடசாலைகளை இணைத்து காத்தான்குடியில் தனியான முஸ்லிம் கல்வி வலயம் ஒன்றை ஏற்படுத்த ஆளுநர் ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சிக்கும் தடையேற்பட்டுள்ளது.