News Update :

Friday, May 10, 2019

TamilLetter

ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய உறவுகள் இருப்பதாக குற்றச்சாட்டு


ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பலத்த சர்ச்சைகளும், சந்தேகங்களும் தோன்றியுள்ளன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளார்.

எவ்வாறு அவருக்கு 500 மில்லியன் ரூபா பங்குகள் கிடைத்தன என்று விசாரணை செய்யப்பட  வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து, இந்த விடயம் குறித்து விசாரிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும், கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும், அதனை கோத்தாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.
தமக்கும் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏதும் கிடையாது என்றும், அவரது திருமணத்தில் ஒரு விருந்தினராக பங்கேற்றேன் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-