இந்தியப் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்ப்பு நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் குஜாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி 2000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவித்த மோடியின் பதவியேற்பில் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தமை முஸ்லீம் மக்கள் மத்தியில் விசனத்தை தோற்றியுள்ளது.
மோடி சார்ந்த RSS பயங்கரவாத அமைப்பு தான் குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியது என்பதை அப்போது டெஹல்க்கா இணையதள பத்திரிக்கை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்திய அளவில் தாம் ஆட்சியை பிடிப்பதற்காக BJP மற்றும் RSS போன்றவை இணைந்து பல முஸ்லிம்களை கொண்று இனவாதத்தை உண்டாக்கி வெற்றி பெற முயற்சித்தமை யாராளும் மறக்க முடியாத நிகழ்வு .
மாட்டிறைச்சி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்காகவே பல முஸ்லிம்களை மோடியின் RSS பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியிருந்தது.
23ம் தேதி வெளிவந்த இந்திய தேர்தல் முடிவுகளின் படி இந்திய அளவில் மோடி வெற்றி பெற்றிருந்தாலும் ,தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 38 தொகுதிகளில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி தனிப்பெரும் வெற்றியை பெற்று தமிழகத்தில் இனவாதத்திற்கும், ப.ஜ.க வின் பயங்கரவாத்திற்கும் இடம் கிடையாது என்பதை தெளிவாக உணர்த்தி விட்டது.
உலக முஸ்லிம்கள் எவராலும் மனதளவில் கூட ஏற்றுக் கொள்ள முடியாத மோடியின் பதவியேற்பில் ஹக்கீம் போன்றவர்களினால் மாத்திரம் தான் கலந்து கொள்ள முடியும் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தடை சட்டம் நாட்டில் அமல் படுத்தப்பட்டு, பல முஸ்லிம் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடிக் கொண்டிருக்க கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
கலவரக் காரர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படா விட்டால் பதவி விலகுவேன் என்று வீர வசனம் பேசிய ரவூப் ஹக்கீம் நரேந்திர மோடியின் பதவியெற்பில் இன்பம் காணுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு மோடி பதவியேற்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவர் அதை மறுத்துவிட்டார்.
மம்தாவை மேற்கு வங்கத்தின் இரும்புப் பெண் என்றும் அழைப்பார்கள். காரணம் ப.ஜ.க மற்றும் RSS பயங்கரவாத அமைப்புகள் மற்றும் மோடி ஆகியோரை அவர் அந்தளவுக்கு கடுமையாக எதிர்க்கிறார்.
ஒரு பெண்ணாக அதுவும் தன் மாநில மக்களுக்காக மம்தாவுக்கு இருக்கும் தற்துணிவும் தைரியமும், SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் இல்லாமல் போனது ஏனோ என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது?
உள்நாட்டு முஸ்லிம்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் நான் என் வழியில் போய்க் கொண்டேயிருப்பேன். என்ற வகையில் ஹக்கீமின் இந்த நகர்வுகள் வெட்கப்பட வைக்கின்றன.
நோன்பு காலத்தில்கூட அப்பாவி முஸ்லிம்கள் சிறைகளில் வாடுகிறார்கள். அதை பற்றியெல்லாம் சிந்திக்காமல் முஸ்லிம்களையே கருவறுத்த, கருவறுக்க துடிக்கிற மோடியின் பதவியேற்பில் போய் அமருவதற்கு உங்களைப் போன்ற மனசாட்சியை விடுமுறையில் அனுப்பியவர்களுக்கு மாத்திரம் இதனை செய்ய முடியும் எனவும் முஸ்லீம் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.