எந்தக்காரணத்தை கொண்டும் தேர்தலை தள்ளிவைக்க மாட்டேன். நவம்பர் 10ம் திகதி அல்லது டிசம்பர் 10ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தியே தீருவேன் என அறிவித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.
ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250 பேருக்கு மேல் உயிரிழந்தனர். அதில் 42 பேர் வெளிநாட்டவர். இந்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினரே நடத்தினார்கள்.
தேர்தலை தள்ளிவைக்க முடியாது. தேர்தலின் முன்னர் தீவிரவாதத்தை அழித்து, நாட்டில் உறுதியான தன்மையை ஏற்படுத்துவேன்.
தீவிரவாத தாக்குதல் குழுவை நாம் ஏற்கனவே நாம் அடையாளம் கண்டுவிட்டோம். அவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வலையமைப்பிலுள்ள 25- 30 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்.
இன்ரபோல், மற்றும் அமெரிக்காவின் எவ்.பி.ஐ உள்ளிட்ட எட்டு நாடுகளின் புலனாய்வுத்துறைகள் இந்த விசாரணையில் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.