News Update :

Tuesday, May 28, 2019

TamilLetter

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு


புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
இதற்கமைய ரஞ்சித் மத்தும பண்டார – பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சராகவும், பீ.ஹரிசன் – விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்தனர்.
மேலும் வசந்த சேனாநாயக்க – வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-