News Update :

Sunday, May 19, 2019

TamilLetter

பஸ்ஸிலிருந்து முதியவரை தள்ளிவிட்டு கொலை செய்த இளம் பெண்


 பஸ்ஸிலிருந்து தள்ளிவிடப்பட்ட முதியவர், ஒரு மாதம் கழித்து மரணமானதைத்  தொடர்ந்து 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் கடேஷா பிஷப் என்னும் அந்த பெண் 74 வயது  சேர்ஜ் போர்னியரை மார்ச் 21 அன்று  பஸ்ஸிலிருந்து  தள்ளிவிட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

வாக்குவாதத்தில் ஆரம்பித்த அந்த சண்டை, விபரீதத்தில் முடிந்தது.
அந்தச் சம்பவம், கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது.
கீழே விழுந்து எழுந்து கொண்டதும், தமக்கு மருத்துவ கவனிப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார் முதியவர்.
இருப்பினும், ஒரு மாதம் கழித்து, மார்பில் ஏற்பட்ட காயத்தால் உண்டான சிக்கல்களால் அவர் மாண்டார்.
அதனைத் தொடர்ந்து, கைகலப்பாகக் கருதப்பட்ட சம்பவம், கொலைச் சம்பவமாக வகைப்படுத்தப்பட்டு,  பெண் கைது செய்யப்பட்டார்.  

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-