மே 25, 1939 கவுண்டமணி:
கோவை மாவட்டம், வல்லகொண்டபுரம் எனும் கிராமத்தில், 1939, மே 25ம் தேதி பிறந்தவர், கவுண்டமணி. இவரது இயற்பெயர், சுப்பிரமணி. நாடகங்களில் நடித்து வந்த போது, 'ஊர் கவுண்டர்' கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதால், 'கவுண்டமணி' என, அழைக்கப்பட்டார்.சினிமாவில், தனி காமெடியனாக நடித்தார்.
, செந்திலோடு இணைந்த பின், தனி ராஜாங்கமே நடத்தினார். 1980களில், அவர்கள் இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு, காமெடியில் சிறந்து விளங்கினார்.
இதுவரையில், 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தேன் உள்ளிட்ட, 12 படங்களில், கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
சமூகத்தால் புறக்கணிக்கப்படும், பிச்சைக்காரர், முடி திருத்துவோர், துணி துவைப்பவர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து, அவர்களின் வேதனைகளை, திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.'
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, அடங்கொப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி, பத்த வச்சிட்டியே பரட்டை' போன்ற இவரின் வசனங்கள், இன்றும், சமூக வலைதளங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின்றன.நடிகர், கவுண்டமணி பிறந்த தினம் இன்று!