தருணம் பார்த்து முஸ்லிம்களின் முதுகில் குத்திய தமிழ் அரசியல்வாதிகளின் வாயை ஒரு வார்த்தையில் அடைத்தார் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா.
நாட்டின் அமைதியை சீர்குலைத்த ஒரு சிலரின் நடவடிக்கையால் முஸ்லிம் சமூகத்தின் மீது பழியைப்போட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதியாக்கி குற்றவாளி கூண்டில் நிறுத்த முற்பட்ட தமிழர்களின் வக்கிரத்தை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
வடக்கு கிழக்கு இணைய வேண்டுமென்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்மென்றும் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் கதறித்திறியும் தமிழ் தலைவர்கள்; முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரங்களை இவ்வளவு காலமும மறைமுகமாக எதிர்த்து வந்த இவர்கள் இன்று வெளிப்படையாக தமது எதிர்ப்பை காட்ட தொடங்கி விட்டனர்.
30 வருடம் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த தழிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு தனது குடும்பத்தில் ஒரு புலி உறுப்பினர் என்ற வீதத்தில் பயங்கரவாத செயற்பாட்டிற்கு தீனி வழங்கி இந்த நாட்டின் விலை மதிக்க முடியாத உயிர்கள் சொத்துக்கள் என அழித்தவர்கள் தமிழ் பயங்கரவாதிகள்.
தமிழ் பயங்கர வாதத்தை எதிர்த்த தமிழ் புத்திஜீவிகளைக் கூட இரக்கமற்ற முறையில் கொலை செய்து தனது இரத்த வெறியை தீர்த்த போதும் அந்த பயங்கர வாதிகளுக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயற்பட்டவர்கள் யார்?
தமிழ் பயங்கர வாதிகளின் ஆசீர்வாதத்தோடு பாராளுமன்றம் சென்ற நீங்கள் இன்று முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து கேள்வி கேட்க முனைகின்றீர்கள்.
யாரோ ஒரு தழிழ் சமூகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி கூறுகின்றார் தமிழ் புலிகள் உள்ளூர் தீவீரவாதிகலாம் என்று இதற்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா சரியான விளக்கத்தை தழிழ் மக்களைப்பார்த்து கூறியுள்ளார்.
தழிழ் பயங்கர வாதிகள் உள்ளுரில்தான் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால்; இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி உட்பட பல வெளிநாட்டு பிரஜைகளை ஏன தழிழ் புலிகள் கொன்றார்கள் என தமிழ் லெட்டர் இணையம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இக் கேள்வியை ஏழுப்பியிருந்தார்.
மேலும் அதாஉல்லா உரையாற்றுகையில் அன்றும் நாங்கள் தழிழ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டுமென்று கூறினோம். இன்றும் கூறுகின்றோம் மதத்தை வைத்து பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இந்த பயங்கரவாதிகளையும் அழிக்க வேண்டுமென்று.
பயங்கரவாதிகளுக்கு ஒத்தாசை வழங்கியவர்கள் யாராக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் பின்னால் மறைந்து நிற்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
அமைச்சர் ரிஷாட் கடந்த பத்து வருடமாக ஒரே அமைச்சை கேட்டு பெறுவதன் நோக்கம்தான் என்ன.இதனால் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த நன்மை என்ன? அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் பதவி விலக மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று மேலும் கூறினார் அதாஉல்லா