News Update :

Sunday, May 5, 2019

TamilLetter

நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்



நாட்டின் எப்பாகத்திலும் ரமழான் மாத மாதத்திற்கான தலைப்பிறை இன்றைய தினம் தென்படாததின் காரணமாக, ஷஹ்பான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து ரமழான் மாத நோன்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற ரமழான் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய விவகார அமைச்சு, கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உள்ளிட்ட பிறைக்குழு இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-