News Update :

Friday, May 17, 2019

TamilLetter

ஆளுநர் பதவி இல்லாமல் ஒரு நாள் இருந்த ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இச் சந்திப்பின் போது கிழக்கு ஆளுநர் என்ற பதவி பதம் இல்லாமல் பல்கலைக்கழகத்தின் ஸ்த்தாபகராகவே பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






இப்பல்கலைக்கழகம் தொடர்பாக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி குறித்த பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு இருந்தனர். ஆனால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

இக் குழுவினர் இன்று பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி அமைச்சின் கோப் குழு தலைவருமான பேராசிரியர் ஆசு மாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜயரெட்ண, எஸ்.வியாளேந்திரன், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சஜிவி கமகே, மகாவலி பிராந்திய முகாமையாளர் எஸ்.திசார ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பல்கலைக்கழகம் தொடர்பான ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பல்கலைக்கழக வளாகம் மற்றும் சகல நிர்வாகப் பிரிவுகளையும் பார்வையிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-