கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிடம் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் கொண்ட அணி
கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகியோரே 16 பேரின்
சார்பில் ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்றும், இது
குறித்து விரைவில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்
என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று தொடர் தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளின் கோட்டையாக காத்தான்குடியே விளங்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஹில்புல்லாவின், அரசியல்
கோட்டையாகவும் இப்பகுதியே விளங்கியது. எனவே, ஏதேனும்வொரு வகையில்
அடிப்படைவாதத்துக்கு அவர் உதவியிருக்கலாம் என்ற கோணத்தில் தென்னிலங்கை
அரசியல் வாதிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
அத்துடன், கிழக்கை மையப்படுத்தி உருவாக்கப்படும் தனியார் பல்கலைக்கழகமொன்றை
அமைக்கும் நடவடிக்கையிலும் ‘குறுக்கு வழி’ செயன்முறை
பின்பற்றப்பட்டுள்ளதாக மஹிந்த அணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவரை
நியமிக்குமாறும், அங்கிருப்பவரை வேறொரு இடத்துக்கு மாற்றுமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.