News Update :

Wednesday, May 1, 2019

TamilLetter

முப்படை தளபதிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு



பாடசாலைகள், மதஸ்தலங்களின் பாதுகாப்புக்கு மேலதிக படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி முப்படை தளபதிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் மக்களின் நலன் கருதியும் பாடசாலைகளுக்கு தற்காலிகமாக அரசாங்கத்தால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் பாடசலைகள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை மதஸ்தலங்களுக்கும் தொடர்ந்து பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டு வந்தன.எனினும் மேலதிக படையினரை ஈடுபடுத்தி பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கு பலத்த பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-