சாய்ந்தமருது பகுதியில் உயிரிழந்த குண்டுதாரிகளின் 10 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலின் போது 15 பேரின் சடலங்கள் வீடு ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டன.
6 ஆண்கள் 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் என 15 பேர் உயிரிழந்து இருந்தனர்.
இதில் தற்கொலைவாதிகள் 10 பேரின் சடலங்களும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மத அமைப்புக்கள் பலவற்றின் கோரிக்கைக்கு அமைவாக இந்த சடலங்கள், எந்த தொழுகை, அனுட்டானங்களும் நடத்தப்படாமல் விசாரணைகளின் பின் புதைக்கப்பட்டுள்ளன.
எனினும் உயிரிழந்த 6 குழந்தைகளின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு தொழுகைகள் மற்றும் மார்க்க அனுட்டானங்கள் நடத்தப்பட்ட பின்னர் உரிய முறையில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.