News Update :

Sunday, May 12, 2019

TamilLetter

27 பேர் கொண்ட குழுவுடன் சீனாவுக்கு கிளம்பினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


இலங்கை ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பீஜிங்கில் நடைபெறும், ஆசிய நாகரீகங்கள் கலந்துரையாடல் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கே சிறிலங்கா அதிபர் சீனா சென்றுள்ளார்.
அவருடன் 27 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங், சீன பிரதமர் லி கெகியாங் உள்ளிட்டோருடன் தனித் தனியான பேச்சுக்களை சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-