நாட்டிலுள்ள அரச துறையில் பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் திறைசேரியின் செயலாளரின் அனுமதியின் பின்னர், பொதுநிர்வாக அமைச்சினால் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.