அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுனர்கள் அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியில் இருந்த விலக்க 24 மணி நேர அவகாசம் வழங்குவதாக இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் அறிவித்துள்ளார் .
இந்த காலப்பகுதியில் அவர்கள் பதவி விலக்கப்படாவிட்டால், நாடு முழுவதிலுமுள்ள பௌத்த பிக்குகளின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தால் மதத்தலைவர்கள், கல்வியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், யுத்த வெற்றிக்கு பங்களித்தவர்களை இணைத்து போராடவுள்ளதாக அறிவித்துள்ளார்.