News Update :

Sunday, May 26, 2019

TamilLetter

முக்கிய குற்றவாளிகள் 13 பேர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றம்



பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை பெற்றுள்ளவர்களும், ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்களும் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குற்றவாளிகள் 13 பேர் நேற்று (25) வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளிலிருந்து பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பூஸ்ஸ சிறைச்சாலையில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அதிக பாதுகாப்புடன் கூடியதாக தடுத்து வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த சிறைச்சாலைக்கு நாளை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-