News Update :

Wednesday, April 3, 2019

TamilLetter

முற்றுகின்றது மைத்திரி ரணில் குடுமிப்பிடி!

 
 
இலங்கை மின்சார​ சபை மற்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு கிடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலும், அமைச்சரவைக் கூட்டங்கள் தான் பங்கேற்க மாட்டேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன, ​நேற்யைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபைக்கு எதிராக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், கருத்துரைத்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்று மற்றுமொரு அரச நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் அந்த நிறுவனம் சரிவடையும் அதேபோல, நுகர்வோர் பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அப்படியாயின் இந்தப் பிர​ச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தின்​ போது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-