News Update :

Tuesday, April 2, 2019

TamilLetter

மைதானத்தின் காணியையும் அரச காணிகளையும் மீட்டு தாருங்கள்.






அக்கரைப்பற்று மாநகர சபையில் ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றம். இன்று அக்கரைப்பற்று மாநகர சபையின் அமர்வின் போது அக்கரைப்பற்று மாநகர பிரதி முதல்வர் அஸ்மி அப்துல் கபூரினால் விசேட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. 

 அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குட்பட்ட சுமார் 20 ஏக்கர் அரச காணி குடாக்கரை எனும் தொழில் நுட்ப கல்லூரியை அண்டிய பகுதியில் காணப்படுவதாலும் அந்த நிலத்தை சட்டவிரோத குடியேற்றகாரர்களால் அபகரிக்கப்பட்டு வருவதாலும் அக்கரைப்பற்று மாநகர சபை இது தொடர்பால் கருத்தில் கொண்டு உரிய திணைக்களங்களுக்கு அறிவுருத்தி உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றும், அக்கரைப்பற்று அணைத்து விளையாட்டு கழக ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய அக்கரைப்பற்று விளையாட்டு மைதானத்தின் காணி உறுதியிலே குறிப்பிடப்பட்டிருக்கும் அளவை உறுதி படுத்தி தருமாறும் மைதானத்தின் நிலங்களை அபகரித்து இருக்கின்ற தனி நபர்களை உடனடியாக நீதி மன்ற உத்தரவை பெற்று அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அரச நிதியை பயன்படுத்தி மாநகர சபையின் ஆட்சி இல்லாத காலத்தில் அமையப் பெற்ற மதில் சுவர் மைதானத்தின் உரிய முறையில் நிள அளவை செய்யப்படாமல் கட்டப்பட்டது ஏன்? அதற்கான விடயங்களையும் சபை சமர்ப்பிக்க வேண்டும். 

அக்கரைப்பற்று மாநகர சபைக்குள் இருக்கும் வயல் காணி களையும் வாய்கால்களையும் நிரப்புவதால் மிகப் பாரிய வெள்ள அனர்த்தம் ஒன்றை எமதூர் எதிர் கொள்ளும் நிலை ஏற்படும் என பல தடவை நீர்ப்பாசன பொறியியலாளரால் அறிவுரை வழங்கப்பட்டும் இது வரை அவை தொடர்பில் எந்த அரச நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வில்லை, எனவே என்னிடம் இருக்கும் ஆவனங்கள் ஊடாக இவற்றுக்கெதிராக நீதி மன்றம் செல்லப் போவதாகவும் பிரதி முதல்வர் சபையின் ஆதரவை வேண்டினார் இதன் ஏகமனதாக பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-