News Update :

Saturday, March 2, 2019

TamilLetter

அக்கபை்பற்று உதைப்ப்தாட்ட சாதனை வீரர்கள் பட்டியலில் மாஜீத் இடம் பிடிப்பு



கிழக்கு மாகாண வரலாற்றில் ஒரு பிரதேசத்திலிருந்து அலியார் நவாஸ் மற்றும் ஏ.ஜி.அன்வர் என இரண்டு வீரர்கள் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசமாக அக்கரைப்பற்று இருந்து வந்துள்ளது.

அக்கரைப்பற்றில் பிறந்த பல வீரர்கள் இலங்கையின் உதைப்பந்தாட்ட துறைக்கு ஆற்றிவரும் சேவை அளப்பெரியது.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதச் செயலாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஜெஸ்பர் பணியாற்றிக் கொண்டிருப்பதோடு இவரின் திறமையை பெரும்பான்மை சமூகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றன.

அதேபோல் அக்கரைப்பற்றின் பிரசித்துபெற்ற கோல் கீப்பர் என்.ரீ.பாறுக் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக இருந்து வருவதுடன் காத்தன்குடி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பாற்றி வருகிறார்.

கோல் கீப்பர் பாறுக் உதைப்பந்தாட்ட நடுவராக தன்னை நிலைநிறுத்தி கொண்டு சர்வதேச போட்டிகளில் நடுவராக கடமையாற்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இப்படிப்பட்ட வரலாறுகளைக் கொண்ட அக்கரைப்பற்றில் காலத்திற்கு காலம் இம்மண்ணின் பெருமையை உலகறியச் செய்த பல உண்ணத வீரர்கள் இருந்து வந்துள்ளனர்.

அந்த வரிசையில் அஷ்ரப் ஆசிரியர்.எம்.எஸ்.லெத்தீப், காராட்டி பாயீஸ்,எஸ்.எல்.எம்.ஹனிபா,ஐ.எல்.பஸீர்,எஸ்.எல்.நிலாம்,ஏ.எல்.றமீஸ் போன்ற மாபெரும் வீரர்களின் பட்டியலில் இன்று மாஜீத் இணைந்துள்ளார்.

சிறுவயதைக் கொண்டிருந்தாலும் சிறந்த ஒழுக்கத்துடனும் நல்ல பன்புடனும் மூத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துபவராகவும் இருந்து வருகின்ற மாஜீத் அதிவேகமாக பந்தை காவிச் செல்வதில் தனிச்சிறப்பு பெற்றவர்.

தேசிய உதைப்பந்தாட்ட அணியின் தேர்வுக்கான பெயர்ப்பட்டியலில் மாஜீத்தின் பெயர் உள்ளடக்கப்படுள்ளதுடன் உதைப்பந்தாட்ட நடுவருக்கான தேர்வில் சித்தியடைந்து சிறப்பான நடுவருக்கான விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளார்.

இன்று அக்கபை;பற்றில் நடைபெருகின்ற உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சூசிற்றி கழகம் சார்பாக மாஜீத் களமிறக்கபடுகிறார்


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-