சமூகத்துக்கு நன்மையான வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஆதரிப்போம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் உயர் கல்வி அமைச்சருமாகிய ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் எங்களது உறுப்பினர்களை சரியாக தெரிவுசெய்ய வேண்டும். தேர்தல் முறையிலுள்ள வாய்ப்புக்களை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள தவறக் கூடாது.
ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் அரச நிறுவனங்களில் ஒன்றாகவே உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்று (02) அனுராதபுர மாவட்டத்தில் கடவத ரத்மல, ஹொரவபொத்தான – பத்தாவ, கியுல்லுகட, மெதவாச்சிய சந்தி, கஹடகஸ்திலிய, நாச்சியாதீவு போன்ற இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தபின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.