ஒரு சமூகத்தின் தலைவனை முதலில் அடையாளம் காட்டுவது இன்னுமொறு சமூகமே. அந்த வகையில் தமிழர்கள் தனது தலைவனை அடையாளம் காண்பதற்கு முன்பாகவே சிங்கள சமூகத்தால் பிரபாகரன்தான் தமிழர்களின் தலைவர் என உலகம் முழுவதும் அடையாளம் காட்டிய வரலாறு தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அப்படிப்பட்ட தமிழர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தின் தலைவன் ஹரீஸ்தான் என இன்று பாராளுமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்று ஒலமிடும் தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களின் நிலத்தை சூரையாடுவதற்கு முன்நிற்பதன் மூலம் அவர்களின் அடாவடி ஆயுதக் கலாச்சாரத்தை மீண்டும் புதுப்பிக்க தொடங்கியுள்ளது.
இலட்சக் கணக்கான முஸ்லிம்களை தனது பூர்வீக மண்ணை விட்டு விரட்டியடித்த தமிழ் இனம் இன்று கல்முனை மண்ணையும் களவாட எத்தனிக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தனது அடுத்த தேர்தல் வெற்றிக்காக கையிலெடுத்த போராட்ட வடிவமே கல்முனை மண்ணை பறிப்பதாகும்.
தமிழர்களின் போராட்டத்தையே காட்டிக் கொடுத்து முஸ்லிம்களின் ஆசீர்வாதத்தால் வளர்ந்த திருக்கோவில் கோடிஸ்வரன் கல்முனை பிரதேசத்தில் ஒற்றுமையுடன் வாழும் தமிழ் முஸ்லிம் உறவுகளை பிரித்து அதில் குளீர்காய நினைக்கின்றார்.
கல்முனை மண்ணில் பிறந்த சட்டத்தரணி ஹரீஸைப் பார்த்து இவர் யார் என பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கிறார் இனவாதி கோடிஸ்வரன்.
அப்படியானால் எத்தனையோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்க ஹரீஸ் மீது மட்டும் இனவாதிகள் தாக்க முற்படுவது எதற்காக என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிடி மண்ணையும் இனவாதிகளால் அள்ளிக் கொண்டு போவதற்கு ஹரீஸ் தடையாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே இனவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான பேச்சுக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தனது பதவியை விட தனது மண்ணே முக்கிம் என பகிரங்கமாக அரசாங்கத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் எச்சரித்துள்ளார் சட்டத்தரணி ஹரீஸ் எம்.பி.
இந்த எச்சரிப்புத்தான் எமது சமூகத்தின் தலைவனை எதிரணியினாரால் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எனவே எமது மண்ணைக்காக்க அரசியலுக்கு அப்பால் ஹரீஸ் எம்.பியின் பின்னால் நாம் அணிதிரள வேண்டியது காலத்தின் தேவையாகும்.