அதில் சில தகவல்கள் வருமாறு:- வங்காளதேசம் டாக்காவில் 2 நாள் தங்கியிருந்துவிட்டு, 1994-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி போர்த்துகீசியாவை சேர்ந்த வாலி ஆடம் இசா என்ற பெயரில் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தேன். அங்கு குடியுரிமை அதிகாரிகள், நீ போர்த்துகீசியர் போல இல்லையே என்று கேட்டதற்கு, நான் குஜராத்தில் பிறந்தவன் என்று கூறி தப்பிவிட்டேன்.
பின்னர் அங்கிருந்து ஒரு வாடகை கார் மூலம் சாணக்யபுரியில் உள்ள அசோகா ஓட்டலுக்கு வந்து தங்கினேன். பின்னர் ஷரன்பூர், லக்னோ போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பினேன். பிப்ரவரி 9-ந் தேதி காஷ்மீர் ஸ்ரீநகர் வந்தேன். மறுநாள் மாதிகன்ட் சென்றுவிட்டு திரும்பும் வழியில் ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.