பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற
இந்திய நீர்மூழ்கி கப்பலின் முயற்சியை முறியடித்து விட்டதாக பாகிஸ்தான்
கப்பற்படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின்
கப்பற்படை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையுடன் புகைப்படம் ஒன்றும்
வெளியிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அமைதி கொள்கையை கடைப்பிடிப்பதன் காரணமாக இந்திய நீர்மூழ்கி கப்பல் தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
இந்த அறிக்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் கடல்
எல்லைக்குள் ஊடுரு முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வெற்றிகரமாக
முறியடித்தோம்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் 2ஆவது முறையாக முறியடித்துள்ளளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.