News Update :

Saturday, March 30, 2019

TamilLetter

பட்ஜெட் : ஸ்ரீ ல.சு.க.யின் தீர்மானம் என்ன? – ஜனாதிபதி தலைமையில் கூட்டம்



அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீது நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து இதன்போது கருத்தில் கொள்ளப்படவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதிக் கட்ட வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-