News Update :

Wednesday, March 6, 2019

TamilLetter

சட்டத்தரணி அன்சிலின் இன்றைய தீர்மானத்தால் பாலமுனை மண் பெருமை கொள்கிறது




தான் தோற்றாலும் தனது மண் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக தனக்கு இழைக்கப்பட்ட அநிதிகளை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நபரை உபதவிசாளராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பொறுப்பாளர் எம்.ஏ.அன்ஸில்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட அன்சிலின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் தேசிய காங்கிரஸ் ஏழு உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக்கட்சி எட்டு ஆசனங்களையும்,பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும் பெற்ற நிலையில் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கியதன் மூலம்; சமமான என்னிக்கையை அது எட்டியது.
சுமனான என்னிக்கையை  இரண்டு போட்டியாளர்களும்; பெற்ற காரணத்தினால் திருவில சீட்டு மூலம் தவிசாளரை ஐக்கிய தேசியக்கட்சி தன் வசப்படித்திருந்தது.இதே முறையில் தேசிய காங்கிரஸ் பிரதித் தவிசாளரை தன் வசப்படுத்திருந்தது.

இப்படியான சூழ்நிலையில் பிரதித் தவிசாளராக பதவி வகித்துவந்த தேசிய காங்கிரஸின் எம்.எஸ்.எம்.ஜெபர் பிரதித் தவிசாளர் பதவியை கடந்த மாதம் இராஜீனமா செய்த நிலையில் அவ் வெற்றிடத்திற்கு புதிய பிரதித் தவிசாளர் தெரிவு இன்று இடம் பெற்றது.

18 ஆசனங்களில் 8 ஆசனங்களை மாத்திரம் வைத்துக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சி பிரதித் தவிசாளராக பாலமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.ஹனிபா அவர்களை பிரேரித்தன. அதே போல் தேசிய காங்கிரஸ் ஏ.எல்.அஜ்மல் அவர்களை முன்நிறுத்தியது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது தவிசாளர்  மற்றும் உதவித் தவிசாளர் தெரிவின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுன இம் முறை நடுநிலையாக செயற்பட்டதன் விளைவாக ஒன்பது ஆசனங்களின் ஆதரவைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி எட்டு ஆசனங்களாக குறைக்கப்பட்டிருந்தது.

இதே வேளை கடந்த தெரிவின் போது தேசிய காங்கிரசுக்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம் முறை அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

தனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதித் தவிசாளராக போட்டிக் களத்தில் நிற்கும் போது வேறு ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த அதுவும் தனது கட்சிசாராத நபருக்கு எப்படி தமது ஆதரவை வழங்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தது.

தனது வட்டாரத்தில் தனக்கு எதிராக செயற்படும் ஒரு கட்சி என்பதைவிட தனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதேச சபையின் உயர் பதவியை அடைவதே சிறந்தது என அன்ஸிலின் விட்டுக் கொடுப்பால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பிரதேச சபை உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த ஹனிபா அவர்களுக்கு  தமது ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

இதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக எஸ்.எம்.எம்.ஹனிபா 11 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-