ஆசுகவிஅன்புடீன் அவர்களின் 50வது வருட இலக்கியபொன்விழாக்கூட்டம் அண்மையில் அட்டாளைச்சேனையில் எம்.சிறாஜ் அகமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது அக் கூட்டத்தில் சிறப்புபேச்சாளராககலந்துகொண்டுபேசியபன்நூல்கள்ஆசிரியரும் நாடறிந்தஎழுத்தாளருமானதமிழ்மணிமானா. மக்கீன்அவர்கள் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
கிழக்கிலங்கையில் உள்ளஒவ்வோர் ஊரிலும்எழுத்துத் துறையிலும் இலக்கியத்திலும் பங்காற்றியபலமுன்னோடிகள் இருந்துவந்துள்ளார்கள்.அந்தவகையில்அட்டாளைச்சேனையில் நடைபெறும் இந்தவிழாவில் நான் கலந்துகொண்டுபேசுவதையிட்டுபெருமைப்படுகிறேன். இந்தஊரின் முதல் மூத்தஎழுத்தாளர்சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள்தான் என்பதையும் இவ்விடத்தில்தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன் எனவும்அவர்குறிப்பிட்டார்.
இப்பகுதிகளில் வாழும் முஸ்லிங்கள் பரவலாகவும் பெரும்பாலும் இலக்கியஆர்வளர்களாகவும்,கவிஞர்களாகவும்,கதாசிரியர்களாகவும் காணப்படுகிறார்கள். தமிழ்மொழிக்குஅவர்கள் ஆற்றிபங்களிப்புஅளப்பரியது. அதனை இந்நாட்டு இலக்கியவாதிகள் இலகுவில் மறக்கமுடியாது. ஆசுகவிஅன்புடீன் அவர்களின் இலக்கியபணியில் அவர் 50 ஆண்டுகளைகடந்து இன்றுநடைப்பெறும் இப்பொன்விழாவில் அன்னாரைநான்வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
மேற்படி இவ்விழாவில் பிரதமஅதிதியாக முஸ்லிம் காங்கிரஸின்தேசியதலைவரும் அமைச்சருமானகௌரவரவூப் ஹக்கிம்அவர்கள்கலந்துகொண்டுசிறப்பித்தார் அத்துடன் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.ஏம்.அதாவுல்லா,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,பா.உ. ஏ.எல்.எம். நஸீர்,கிழக்குமாகண சபைமுதலமைச்சின்செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ்,மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்,பிரதேசசெயலாளர் எஸ். எல். எம். ஹனீபாவும்,புத்தகவெளியீட்டுஉரையை எஸ். எல். மன்சூர் அவர்களும்,ஆய்வுரையைசிராஸ் மஸ்ஹூர்,ஏற்புரையைஆசுகவிஅன்புடீன் அவர்கள் உட்படபலமுக்கிய இலக்கியவாதிகள் கவிஞர்களும்,அரசியல்வாதிகள்எனபலர்கலந்துகொண்டுஅவர்களின் கருத்துரைகளையும் வாழ்த்துரைகளையும் வழங்கிவைத்தார்கள் என்பதும் இங்குகுறிப்பிடத்தக்கது.