News Update :

Saturday, March 23, 2019

TamilLetter

வில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி


வில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தை அரசியல்வாதியொருவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு காணி வழங்கப்பட்ட மக்களுடைய பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில், குறித்த அரசியல்வாதியின் சொந்தங்களுக்கு முக்கிய காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டு, கொலைச் சம்பவம் ஒன்றும் மறைக்கப்பட்டுள்ளது. வில்பத்து பிரதேசத்திலாவது இடம்பெயர்ந்த அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்குவது தவறான ஒரு நடவடிக்கை அல்ல.
இருப்பினும், காணி வழங்குவது என்ற போர்வையில், வில்பத்து வனப் பிரதேசம் அழிக்கப்பட்டுள்ளது. மற்றது, காணி வழங்கும் போது தனது சொந்தங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த அரசியல்வாதி கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர், இந்த அரசாங்கத்திலும் அமைச்சர்.
இந்த அமைச்சர் தான் ஒரு அமைச்சர் என்ற வகையில், தனது தவறை ஏற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையை நிறுத்திவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிலான் பெரேரா எம்.பி. மேலும் கூறினார்.
பதுளையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் மீது அனுதாபம் காட்டுவதற்காக காணி வழங்கப்பட வேண்டும் எனக் கூறும் எந்தவொரு பெரும்பான்மை அரசியல்வாதிகளும் அப்பிரதேச மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லையென்பது கவலைக்குரிய விடயமாகும்.

காணி வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை வைத்து கருணை வார்த்தை கூறி முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்கும் நடவடிக்கை மாத்திரமே அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்குரிய மீள்குடியேற்ற தீர்வு முறைமையொன்றை முன்னெடுக்க மனதளவில் கூட இறுக்கமானதாகவே காணப்படுகின்றது என்பதை வார்த்தைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-