நான் ஐக்கியதேசிய கட்சியிலோ, அல்லது வேறு எந்த கட்சியிலோ சேரப்போவதில்லை என பல தடவை தெரிவித்து விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர்,
ஸ்ரீலங்கா கட்சிக்குள் நான் புறக்கணிக்கப்படுவதை காரணம் காண்பித்து என்னை ஐக்கியதேசிய கட்சிக்குள் சேர்ப்பதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே நான் எனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தேன்.
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறும்போது எனது பயணத்தை அந்த கட்சியிலேயே முடித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உரிய முறையில் நிர்வகித்தால் கட்சியின் கிராமிய மட்ட அமைப்புகளை பலப்படுத்தினால் அந்த கட்சியால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும்.
பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பின்பற்றுகின்றனர் என்பதற்காக ஏன் நாங்கள் இன்னொரு கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும் எனவும்,
மீண்டும் மக்களை கொலை செய்ய வேண்டுமா?பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து மீண்டும் ஊழலில் ஈடுபடவேண்டுமா எனவும் சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்
கடந்த நான்கு மாதங்களாக என்னை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
ஆனால் எனது மரணம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் நீடிப்பது கஸ்டமானதாக காணப்பட்ட காலத்தில் நாங்கள் மற்றொரு கட்சியை உருவாக்கினோம்.
ஆனால் ஐக்கியதேசிய கட்சியிலோ அல்லது வேறு கட்சியிலோ இணையவில்லை.
நிலைமை சரியான பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தி 17 வருடங்களின் பின்னர் 1994 இல் ஆட்சியில் அமர்த்தினோம் எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.