பிரபல பின்னணிப் பாடகர் மனோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் கட்டசியில் இணைந்தார்.
ஆந்திரா மாநிலத்தில் பிறந்த மனோ. இஸ்லாமிய
குடும்பத்தைச் சேரந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.. 'சின்னத்தம்பி'
படத்தில் இவர் பாடிய `தூளியிலே ஆடி வந்த’ பாடலுக்கு தமிழ்நாடு அரசு விருது
வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் 'கலைமாமணி', ஆந்திரா அரசின் 'நந்தி'
உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.