மேல் மாகாணசபை உறுப்பினரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை கொழும்பு மாட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகம்மட் பாயிசின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(12) இன்று நள்ளிரவு சுமார் இரண்டு மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால் வீட்டினுள் இருந்த மின் உபகரணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டது.
மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து செயலாற்றிக்கொண்டிருக்கும் முகம்மட் பாயிசை நோக்கி பெரிகிவரும் மக்கள் செல்வாக்கில் சினம் கொண்ட மாற்றுக்கட்சி காடையர்களின் ஈனச்செயல் என்றே இது நம்பப்படுகிறது.
ஏலவே முகம்மட் பாயிஸ் மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து மயிரிளையில் உயிர்தப்பியதும் அருகில் நின்ற ஓர் பொது மகன் அத்துப்பாக்கி பிரதோகத்தில் உயிரிழந்ததும் இங்கே குறிப்பிட தக்கது..