News Update :

Thursday, March 7, 2019

TamilLetter

அமைச்சர் ரிஷாட் ஏமாற்றுக்காரர் - ACMC யின் அக்கரைப்பற்று பிரமுகர் நபீல்



அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு பல வாக்குறுதிளை வழங்கிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன்   அவற்றில் ஒன்றையுமே இதுவரையும் நிறைவேற்றவில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகர் தொழிலதிபர் எம்.என்.எம்.நபீல் தெரிவித்தார்.

அண்மையில் அக்கரைப்பற்றில் ஊடகவியலாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்த போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்த நான் அக்கட்சியின் தலைவரின் நடவடிக்கை காரணமாக அதிர்ப்தியுற்று ஒதுங்கியிருந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை என்னை அழைத்து கட்சியில் இணையுமாறு வேண்டிக் கொண்டது.

அக்கட்சியின் தலைவரின் வாக்குறுதிகளை நம்பி கட்சியில் இணைந்தது மாத்திரமல்ல கடந்த பொதுத் தேர்தலிலும் நான் போட்டியிட்டு கனிசமான வாக்குகளை பெற்றுக் கொடுத்தேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டு சுமார் ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் அக்கரைப்பற்றுக்கும் எனக்கும் வழங்கிய எந்த ஒரு வாக்குறுதியையும் அமைச்சர் ரிஷாட் நிறைவேற்றவில்லை இனி அவரை நம்பி அரசியல் செய்வது முட்டாள்தனமானது.

அக்கரைப்பற்றில் மட்டும் அரசியல் செய்து தனதும் தனது குடும்பமும் அக்கரைப்பற்றை ஆளவேண்டுமென கங்கணம் கட்டித்திரியும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் சமூகத்தை 19 வருடமாக ஏமாற்றி அதிகாரத்திலிருக்கும் அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் ரிஷாட்டும் நமது முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான விமோசனத்தையும் பெற்றுத்தர மாட்டார்கள்.

தனது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கு நமது சமூகத்திற்குள் சிறு சிறு கட்சிகளை உருவாக்கி அதிகாரத்திற்காக ஏங்கும் இவர்களை நாம் நம்பாமல் மக்களாகிய நாமே தேசிய கட்சிகளின் உதவியை நாடுவதன் மூலம் நமக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே எனது நிலைப்பாடு.

நமது சமூகத்திலிருக்கும் சிறு கட்சிகள் மக்களை காட்டி பதவியையும் பணங்களையும் தேசிய கட்சிகளிடம் வாங்குவதன் மூலம் நமது சமூகத்தின் உண்மையான தேவை நிறைவேறாமல் போகின்றது.

எனவே மக்களை வைத்து பேரம் பேசும் சிறுபான்மை கட்சிகளை நாம் புறந்தள்ளிவிட்டு நாம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே புத்திசாலித்தனமானது என நபீல் மேலும் தெரிவித்தார்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-