News Update :

Monday, March 18, 2019

TamilLetter

9 நிமிடங்களில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்



அமெரிக்காவில் பெண் ஒருவர் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரவசவத்திற்குக் காத்திருந்நதெல்மா சயாகா 9 நிமிடங்களில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளனர். ஒவ்வொரு குழந்தைகளும் 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடைத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்தன. 
தாயும் குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-