News Update :

Friday, March 8, 2019

TamilLetter

இன்னும் 6 மாதத்தில் ஆட்சியைப் பிடிப்போம் : மஹிந்த ராஜபக்ஷ



இன்னும் 6 மாதங்களுக்குள் அரசாங்கத்தைப் பிடித்து கண்டி – கொழும்பு அதிவேக பாதையை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்து பொது மக்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொறுத்தது போதும் எனும் தலைப்பில் கண்டியில் நேற்று மாலை ஆரம்பமான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கட்சி உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கலந்துகொள்ளவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-