News Update :

Thursday, March 7, 2019

TamilLetter

சவுதி அரேபியாவில் பாரிய விபத்து – இலங்கையர்கள் உட்பட 6 பேர் காயம்



சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இலங்கையர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று  இடம்பெற்ற இந்த விபத்தில் 4 அமெரிக்க படையினர் மற்றும் இலங்கையர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Khubari Al-Awazem பகுதியில் அமெரிக்க படையினர் ஓட்டிய இராணுவ வாகனம், ட்ரக் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 4 அமெரிக்க படையினரும் பாரிய காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இராணுவ வீரர்கள், அமெரிக்க தளமாக கொண்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இலங்கையர்களும் துயாசய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அன்நாடடு தகவல்கள் தெரிவித்துள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-