News Update :

Friday, February 8, 2019

TamilLetter

தேசிய அரசாங்க பிரேரணை வாபஸ் பெறப்படுவதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் காரணம்- SB



தங்களிடமுள்ள அமைச்சுக்களின் பகுதிகளை இழக்க வேண்டி வரும் என்பதனால் தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதும் அப்பிரேரணையை வாபஸ் பெறுவதற்கு முக்கியமான ஒரு காரணமாகியது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர்களை அதிகரித்துக் கொள்வதற்கான பிரேரணைக்கு, பாராளுமன்றத்தில் பல கோணங்களிலுமிருந்து எழுந்த எதிர்ப்புக்கள் அப்பிரேரணையை முன்வைக்காமல் விடுவதற்கு அரசாங்கத்தைத் தூண்டியது எனவும் அவர் மேலும் கூறினார்.

நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-