News Update :

Friday, February 1, 2019

TamilLetter

தனது தோல்விக்குப் பின் சைக்கிள் கடை நடாத்தும் முன்னாள் எம்.பி

தனது தோல்விக்குப் பின்  சைக்கிள் கடை நடாத்தும் முன்னாள் எம்.பி

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு அம்பாரை மாவட்டத்தில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமையில் ஈர்க்கப்பட்டு அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்.

அரசாங்கத்தில் இணைந்து கொண்டதன் பலனாக அம்பாரை மாவட்டத்திலுள்ள ஐந்து தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அரசாங்கத்தால்;; முன் கொண்டு செல்லப்பட்ட பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பியசேன மஹிந்த உறவால் இத்திட்டத்திற்காக அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை தழுவிய போதும் மஹிந்தவுக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டதனால் இதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலில் பியசேன தோல்வியடைந்தார்.

மைத்திரி அரசாங்கம் பியசேனவை தம்மோடு இணைந்து கொள்ளுமாறு பல தடவைகள் அழைப்பு விடுத்த போதும் தாம் மஹிந்தவின் விசுவாசி என அடையாளம் காட்டினார்.இதனால் சினம் கொண்ட அரசாங்கம் வாகன விவகாரம் தொடர்பாக  இவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
சிறை விட்டு வெளியில் வந்த பியசேனவுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாத காரணத்தினால் துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்கள் விற்கும் கடையை ஆரம்பித்து அதில் வேலை செய்தும் வருகின்றார்;.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவிலான பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து செயற்பட்ட பியசேன இன்று  அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார.;

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-