News Update :

Friday, February 8, 2019

TamilLetter

தேசிய காங்கிரஸ் காரா்கள் லூசி என்றார் அக்கரைப்பற்று தவிசாளர் - சஹாப்தீன் மௌலவி







அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு Compactor கிடைப்பதில் நடந்தது என்ன?????....... 

நேற்று (08/02/2019) மதிய நேரம் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் றாசிக் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

 "பிரதேச சபைக்கு நேற்று (07/08/2019) வழங்கப்பட்ட Compactor வாகனத்தை திரும்ப கொண்டுவருமாறு அமைச்சிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. தயவுசெய்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களோடு பேசி அதனை எமது பிரதேச சபைக்கே கிடைக்கப்பெற உதவிசெய்யுங்கள். மாநகர சபைக்கு ஏலவே Compactor ஒன்று இருக்கிறதுதானே. எனவே இந்த Compactor பிரதேச சபைக்கே கிடைக்க உதவிசெய்ய சொல்லுங்கள்" எனக்கேட்டுக்கொண்டார். 

 நான் உடனே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களோடு பேசினேன். அதற்கு அவர் " ஏனாம் என்னோடு பேச சொன்னார். ஜனாதிபதிதானே அவர்களுக்கு Compactor கொடுத்தாம். ஜனாதிபதியோடு பேச சொல்லுங்களேன். அவர்களுடைய கட்சிக்கார்ரகள் மடத்தனமாக முகநூலில் எழுதுவதால் அதனை மீளப்பெறச் செய்து, வேறு ஒரு தினத்தில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு வழங்கவே மீளப்பெறச் செய்யக்கூறினேன்" 

"எனக்கு பிரதேச சபையும் மாநகர சபையும் ஒன்றுதான்.இரண்டும் நமது ஊர் சபைகள் என்பதால் மாநகர சபைக்கு வழங்க வேண்டியது அதிகாரிகள் மட்டத்தில் நடந்த தவறினால் பிரதேச சபைக்கு வழங்கப்படுகிறது 

என்றிருந்தும் பரவாயில்லை கிடைக்கட்டுமென விட்டிருந்தேன். மாநகர சபையும், பிரதேச சபையும் அக்கரைப்பற்று என்ற பெயரில் இருப்பதால் இவ்வாறான குளறுபடிகள் நடப்பதுண்டு. 

எனவே நான் விட்டுட்டே இருந்தேன். ஆனால், அவர்களுடைய முட்டாள்தனமான முகநூல் பிரச்சாரமே இவ்வாறு மீளப்பெற்று மாநகர சபைக்கே வழங்க முடிவு எடுக்க வேண்டி வந்தது. தவிசாளரும் அவரின் கோரிக்கைக்கு அமைவாக கிடைத்ததாக தம்பட்டமும் அடித்துள்ளாராம்" 

நான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் கூற்றில் சரி கண்டேன். இருப்பினும் அல்லாஹ் மன்னிப்பதை விரும்புவதால் நாம் மன்னித்து விட்டு Compactor மீளப்பெறாமல் அப்படியே விட்டுவிடுங்கள் என சில விடயங்களைக் கூறினேன்.

 தவம் அவர்கள் கோபத்தில் இருந்தாலும் நியாயத்திற்கு செவிசாய்க்கின்ற பண்புள்ளவர் என்பதால் இதனை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அவரை ஆசிவாசப்படுத்தினேன். இறுதியில் "இதற்கு பிறகு வாய்யை மூடிக்கொண்டு இருக்க சொல்லுங்கள். இப்படி மீளப்பெறச் செய்ய தெரிந்த எனக்கு, அதனை மாநகர சபைக்கு வழங்க சில நிமிடங்கள் போதும். இதனை உங்கள் தவிசாளரிடம் கூறுங்கள். பாரவாயில்லை பிரதேச சபைக்கே அப்படியே Compactor கிடைக்கும் என்று உங்கள் தவிசாளரிடம் போய் கூறுங்கள். வஞ்சம் தீர்ப்பதில் யாருக்கும் பிரயோஜனமில்லை என்பதால், நான் இரண்டாம் கட்டத்தில் மாநர சபைக்கு Compactor யை பெற்றுக்கொடுக்கிறேன். இந்த முதலாம் கட்டத்தில் பிரதேச சபைக்கே கிடைக்கும்" எனக்கூறினார். 

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் இந்த செய்தியை தவிசாளர் றாசிக்கிடம் எத்திவைத்தேன். வீணான முரண்பாட்டை வளர்த்து பிரதேச சபைக்கு வருகின்ற நலன்களை கிடைக்க விடாமல் தடுக்கின்ற மடத்தனத்தை, உங்களை வளைத்து இருப்போரை முதலில் கைவிடச்சொல்லுங்கள் எனக்கூறினேன். 

கொஞ்சம் பக்குவமாக நடந்துகொள்ளும்படி கூறுங்கள் எனக்கூறினேன். அதனை தவிசாரும் ஏற்றுக்கொண்டார். இவனுகளுக்கு லூசி என்றார். 

இவ்வாறே பிரதேச சபைக்கு Compactor கிடைப்பது உறுதியானது. தவம் அவர்களின் அழுத்தத்தில் மீளப்பெற்று மாநகர சபைக்கு வழங்கப்படுவதற்கான தொலைபேசி அழைப்பும் வந்த விடயத்தை, மீண்டும் அவரே தலையிட்டு பிரதேச சபைக்கு கிடைக்க வைத்தார்.

 இதை அறியாத, இதனோடு சம்மந்தமே இல்லாத சிலர் இதனைப் பற்றி எழுதியுள்ளதை பார்த்து விட்டு உண்மையை தருவதற்காகவே இப்பதிவினை இட வேண்டி வந்தது. தயவுசெய்து வீணாக கேவலமான உங்கள் அரசியலை செய்ய வெளிக்கிட்டு, எங்கள் பிரதேச சபைக்கு இதற்குப் பிறகு கிடைக்க இருக்கும் நலன்களைக்கூட தடுத்து விடாதீர்கள் என கனிவான கேட்டுக்கொள்கிறேன். 

 இவ்வண்ணம் சஹாப்தீன் மௌலவி பிரதேச சபை உறுப்பினர் அக்கரைப்பற்று

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-