News Update :

Friday, February 8, 2019

TamilLetter

இராஜதந்திர கடவுச்சீட்டு பெற தகுதியானவர்கள்

 


நாட்டில் காணப்படும் பிரதான பதவிநிலைகளின் அடிப்படையிலான 29 குழுக்களுக்கு, இவ்வாறான இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியுமென்று அறிய முடிகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் - இந்நாள் சபாநாயகர்கள், பிரதம நீதியரசர், அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களுக்கு, இவ்வாறான இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வழங்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாட்டுத் தூதுவர்களுக்காக அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படும் அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பிரதி மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்றத் தவிசாளர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவியருக்கும், இந்த இராஜதந்திர கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-