News Update :

Sunday, February 17, 2019

TamilLetter

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்த முக்கிய கருத்து





பலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மகஜன எக்சத் பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் எனும் தினேஷ் குணவர்த்தனவின் யோசனைக்கு நான் முழுமையாக ஆதரவளிக்கிறேன்.
இந்த நாட்டில் சில முக்கியமான தருணங்களின்போது, கட்சி, சின்னங்களையெல்லாம் கடந்து தான் நாம் முக்கியமானத் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

எமது அரசியல் தீர்மானங்கள் அனைத்தும் நாட்டுக்காகத் தான் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பலமான அணியொன்றை தற்போது ஸ்தாபிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். இல்லையென்றால் மட்டுமே எம்மால் வெற்றிபெற முடியுமாக இருக்கும்.

அத்தோடு, இந்த வருடம் தேர்தல் நடைபெறும் வருடமாகும். எப்படியும் புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதனை நாம் மறந்துவிடவில்லை.

இந்நிலையில், நாட்டை யாரிடம் நாம் ஒப்படைக்கப்போகிறோம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாட்டை அடிப்படைவாதிகளுக்கு வழங்கப்போகிறோமா அல்லது நாட்டை நேசிக்கும், பிரச்சினைகளுக்காக தீர்வை முன்வைக்கும் தரப்புக்கு வழங்கப்போகின்றோமா என்பதை மக்கள் தமது மனச்சாட்சியின்படி முடிவு செய்ய வேண்டும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-