பாகிஸ்தான் பிரதமரை நினைத்து பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷஹீட் அஃப்ரிடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்கு ஆதரவாக டுவிட்டரில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான்
அணியின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும் அதிரடி ஆட்டநாயகனுமான ஷஹீட்
அஃப்ரிடி, புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் இம்ரான் கான் முற்றிலும்
தெட்டத் தெளிவாகப் பேசியிருக்கின்றார் என்றும் கூறினார்.
தொடர்ந்தும்
ஷஹீட் அஃப்ரிடியின் டுவிட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் ராணுவப்படையை
நினைத்துப் பெருமைக் கொள்கின்றேன். எங்கள் எதிரிகளையும் இப்படிதான்
கனிவுடன் நடத்துவோம். இந்தியாவால் தொடங்கப்பட்ட இந்த போர் இப்போது
முடிவுக்கு வரவேண்டும். நாங்கள் அமைதியை விரும்பும் நாடு. இதற்கு ஒரே
தீர்வு பிரதமர் இம்ரான் கான் கூறியது போல் இருநாடுகள் இணைந்து
பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே” என தெரிவித்துள்ளார்.
குறித்த
கருத்தானது இந்தியாவில் இருக்கும் அஃப்ரிடியின் ரசிகர்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய விமானப் படை விமானி
அபிநந்தனின் வீடியோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய
விமானப்படை விமானி அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில்
இருக்கும் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியபோதும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது