மீனவர் ஒருவர் மீன்பிடி படகினை கடலுக்குள் தள்ள முற்பட்டபோது, கடல் அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
தன்னாமுனையைச் சேர்ந்த 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான நடேசன் மோகனதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளவராவார்.
நேற்றுகட காலை 7.00 மணிக்கு கடலில் மீன்பிடிப்பதற்காக கரையிலிருந்த படகினை கடலுக்குள் தள்ளிச் செல்ல முற்பட்ட வேலையில் கடல் அலையினால் மீனவர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மீனவர்கள் படகுகளில் தேடுதலில் ஈடுபட்டபோதும் குறித்த மீனவரை காணவில்லை . இது தொடர்பான விசாரணைகளை எறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.