சாதீக் புர்கான்
மக்கள் விரும்பினால் அட்டாளைச்சேனை பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்படும் என உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையால் நடாத்தப்பட்ட விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை நகர சபையாக தரம் உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு ஈடுபட்டு வரும் வேளையில் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் இன்னும நகர சபையாக உயரத்த வேண்டுமென்ற தமது சம்மதத்தை இவ் அமைச்சுக்கு வழங்கில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.
பிரதேச சபை நகர சபையாக தரம் உயர்த்தப்படும் போது அப்பிரதேச மக்களின் சம்மதத்தை பெற்றபின்பே அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுதல் அவசியமாகும் அந்த வகையில் அமைச்சரினால் வாக்குறுதியளிக்கப்பட்டு நாட்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபை, அரசியல் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என யாரும் நகர சபை தொடர்பாக கரிசனை காட்டவில்லை.
பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தும் பிரேரணை இன்னும் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பது பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அதன் உறுப்பினர்களின் ஆளுமையை புடம்போட்டு காட்டியுள்ளது.
குறிப்பிட்ட துறைசார்ந்த அமைச்சர் தன் காலடிக்கே வந்து தமது பிரதேசத்தை கௌரவப்படுத்த முன்வந்த நிலையிலும் அசட்டைதனமாக அரசியல் தலைவர்கள் இருந்து வருவது அவர்களின் அரசியல் அறிவீனமாகவே பார்க்கப்படுகிறது.
நகர சபையாக தரமுயர்த்தப்படுவதால் ஏதேனும் சர்ச்சைகள் இருப்பதாயினும் அது தொடர்பாக துறைசார்ந்த புத்திஜீவிகளை அழைத்து திறந்த கலந்துரையாடல்களை நடாத்தமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.
எதிர்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது உணர்ச்சிகளுக்கு உட்படாது அறிவுரீதியாக சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் சிறந்த பிரதேசத்தையும் சிறந்த மக்களையும் நாம் பெற முடியும் உண்மை