News Update :

Wednesday, February 13, 2019

TamilLetter

பிரதமர் ரணிலின் பாதுகாப்பு படையினரை தடுத்து நிறுத்திய கடற்படை




பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினர், காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் 6 தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். பலாலி விமானத் தளத்தையும் சென்று பார்வையிடவுள்ளார்.

பிரதமர் செல்லவுள்ள இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவரது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும். அதற்காக அந்த இடங்களுக்கு முற்கூட்டியே சென்று நிலைமைகளை ஆராய்வது பிரதமர் பாதுகாப்புப் பிரிவின் வழமையான நடவடிக்கை.அதற்காக, காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பிரதமர் பாதுகாப்புப் பிரிவினர் 6 நாட்களுக்கு முன்னர் சென்றுள்ளனர். முகாமுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதேபோன்று, பலாலி விமான நிலைய விமானப் படையினருக்கும், பிரதமர் நாளை செல்லவுள்ள விவகாரம் தெரிவிக்கப்படவில்லை. பலாலி விமான நிலையத்துக்குப் பிரதமர் வரவுள்ளாரா என்று வான் படையினர் பிரதமர் அலுவலகத்திடம் வினவியுள்ளனர்.

இதன்பின்னரே, பிரதமரின் யாழ். பயணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதையடுத்து பிரதமரின் நிகழ்ச்சி நிரல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-