News Update :

Thursday, February 14, 2019

TamilLetter

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவையா உதுமாலெப்பை தாக்கி பேசியது?



சித்திக் மூஸா

அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அட்டாளைச்சேனை பிரதேசம் நன்மையடைய வேண்டுமென்பதற்காகவே கம்ரெலிய திட்டத்;தை முழுமையாக செயற்படுத்த நாங்கள் ஒத்துழைத்தோம் என முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பாடசாலை விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  உதுமாலெப்பை இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

 கம்ரெலிய திட்டத்தை சில பிரதேசங்களில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து நிறுத்தினார்கள்.ஆனால் நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத காரணத்தினால் சுமார் 300 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள் செய்து முடிக்கப்ப்பட்டுள்ளது.

கம்ரெலிய வேலைத்திட்டம் அட்டாளைச்சேனையில் சிறப்பாக நடைபெற்றதற்கு எங்களை எல்லோரும் பாராட்டுகின்றனர்.

அக்கரைப்பற்றில் கம்ரெலியத்திட்டத்தை அதாஉல்லா தரப்பினர் தடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-