News Update :

Thursday, February 21, 2019

TamilLetter

விஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்




நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, சமீபத்தில் சென்னை திரும்பினார். அவரை அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து, நலம் விசாரித்து வருகின்றனர். கூடவே பார்லிமென்ட் தேர்தலுக்கான கூட்டணி அழைப்புகளும் இந்த சந்திப்பில் அரங்கேறி வருகின்றன.

 இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்., 22) வந்தார். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.




ரஜி பேட்டி:
சந்திப்புக்குப் பின் ரஜினி கூறும்போது, ‛‛நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது முதலில் என்னை விசாரித்தவர் விஜயகாந்த். அவர் இப்போது நன்றாக இருக்கிறார். அரசியல் எதுவும் நாங்கள் பேசவில்லை. ஏற்கனவே நான் கூறிய அரசியல் பிரவேசம் பற்றிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-