இலங்கையில் தமிழீழம் ஒருபோதும் மலரப் போவதில்லை. தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார்.
நனவாகாத கனவை எண்ணிக் கொண்டு சந்தர்ப்பங்களை தவறவிடாது நாம் அனைவரும் ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். வடக்கு மக்களுக்கு அபிவிருத்திக்கான பாதையை உருவாக்கிக் கொடுத்து அவர்களின் கஷ்டங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது.
யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெற்றமை மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, ஆனால் அவை எதுவுமே திட்டமிட்ட அழிப்பு அல்ல. போர்க்குற்றச்சாட்டில் இராணுவத்தை தண்டிக்க வேண்டுமென்றால் அதே குற்றங்களில் விடுதலைப் புலிகளையும், இந்திய அமைதிப்படையையும் ஏனைய தரப்புகளையும் தண்டிக்க வேண்டும். ஆகவே உண்மைகளை கண்டறிவது விடுத்து தீர்வுகளை நோக்கி பயணிப்போம் என்றார்.