News Update :

Tuesday, February 26, 2019

TamilLetter

பொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்!


 அகமட் முஷாரப்

 பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி  விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

குறித்த படகு, மீன்பிடித்தொழிலுக்காக கடந்த 23 ஆம் திகதி கடலுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த படகு, பொத்துவில் கடற்பரப்பில்  கப்பலுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் ஒன்று வருவது தொடர்பில் படகில் உள்ள சமிக்ஞை அமைப்பிற்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என நத்தாலிய படகின் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான படகு துறைமுகத்திற்கு கொண்டுவரபட்டதன் பின்னர் அதிலிருந்த இரண்டு மீனவர்கள் சிகிச்சைகளுக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய படகு தற்சமயம் திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-